சுடச்சுட

  

  சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட திருப்பாவாடை விழா

  By DIN  |   Published on : 08th May 2017 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட திருப்பாவாடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி காலை வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனமும், இதனைத் தொடர்ந்து, அன்னக்கூட திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்னத்தை சுவாமி முன் வைத்து படைத்தனர். இதனையடுத்து, படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai