சுடச்சுட

    

    தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜனுக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
    சென்னை தலைமைச் செயலகத்தில் 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜனுக்கு, தமிழ்ச் செம்மல் விருது மற்றும் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பாராட்டினார்.
    இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி ஆகியோர் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பா.இந்திரராஜனைப் பாராட்டினர். நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ந.சண்முகம், பாபு கு.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai