Enable Javscript for better performance
தர்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி - கொசப்பாளையம், ஸ்ரீ தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கோயிலில் ஏப்ரல் 2-ஆம் தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தினமும் 2 மணியளவில் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இரவு கட்டைக் கூத்தும் நடைபெற்று வருகிறது.
    அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் இறக்கும் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீமிதி விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி, திரெளபதி அம்மனை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai