Enable Javscript for better performance
பக்தர்களிடம் திருட்டு: 4 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பக்தர்களிடம் திருடியதாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
    சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் இலக்கியா (30). இவர், சனிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கோயில் எதிரே வரிசையில் நின்றிருந்தபோது அவரது பையில் இருந்த இரு பர்ஸுகளை 2 பெண்கள் எடுத்தனராம். இதைக் கவனித்த பக்தர்கள் அவர்களைப் பிடித்து கோயில் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
    மற்றொரு சம்பவம்: திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. இவர், சனிக்கிழமை உண்ணாமுலையம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தபோது அவரது பர்ஸை 2 பெண்கள் திருட முயன்றனராம். அங்கிருந்த பக்தர்கள் அவர்களை பிடித்து கோயில் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
    பிடிபட்ட 4 பெண்களையும் கோயில் ஊழியர்கள் திருவண்ணாமலை நகர போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து, கர்நாடக மாநிலம், அன்னகேரி பகுதியைச் சேர்ந்த ரத்தினா (55), கமலா (58), குமாரம்மா (40), பீமா (55) ஆகியோரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai