Enable Javscript for better performance
பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி, செய்யாறு, போளூர் மற்றும் தெள்ளாறு பகுதிகளில் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.
    வந்தவாசி ஒன்றிய பாஜக சார்பில், ஒன்றியத் தலைவர் சி.அரிகிருஷ்ணன் தலைமையில் பிருதூர் கிராமத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலர் ஆர்.மோகனம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் (மகளிரணி) சுகந்தரி ஸ்ரீதர், மாவட்ட முன்னாள் பொதுச் செயலர் வி.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணித் தலைவர் எம்.பி.குட்டி, ஒன்றியப் பொதுச் செயலர் எஸ்.பழனி, ஒன்றியப் பொருளர் சி.ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    கூட்டத்தில் வந்தவாசி வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவற்றில் விவசாயிகளுக்கு மானிய விலை பொருள்கள், விதைகள், சொட்டுநீர் பாசன குழாய்களை முறையாக வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசி ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் முறைகேடு நடப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இதேபோல தெள்ளாறு ஒன்றிய பாஜக சார்பில், ஒன்றியத் தலைவர் என்.குமார் (எ) பச்சையப்பன் தலைமையில் தெள்ளாறில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
    மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் லலிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலர் டி.கவிதா, ஒன்றியப் பொதுச் செயலர்கள் எம்.முருகேசன், எம்.நரசிம்மன், எ.பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    செய்யாறில்...: செய்யாற்றில் நடைபெற்ற நகர மண்டலச் செயற்குழுக் கூட்டத்துக்கு நகரத் தலைவர் இராஜ.கணபதி தலைமைத் வகித்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் எஸ்.நேரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
    இக்கூட்டதில், மக்களின் வசதிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி, செய்யாறைத் தலைமையிடமாகக் கொண்டு செய்யாறு மாவட்டத்தை உருவாக்க வேண்டும், செய்யாறு புறவழிச் சாலையில் இருபுறமும் நடைபாதை அமைக்க வேண்டும், கிராமங்கள் பயன்பெறும் வகையில் நீர் ஆதாரத்தை பெருக்க செய்யாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்யாறு நகர பாஜக செயலர்கள் பி.அருள், ஓடியன் ஏ.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    போளூரில்...: போளூரில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச் செயலர் என்.வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கிராமங்கள் தோறும் கிளைகள் அமைத்தல், கொடியேற்றுதல் குறித்துப் பேசினர்.
    மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெயவேலு, மகளிரணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai