சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு காஞ்சி வழியாக மூலக்காடு கிராமத்துக்குச் செல்ல நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. சனிக்கிழமை (மே 6) இரவு இந்தப் பேருந்துக்காக 30-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
    இரவு 11 மணியாகியும் பேருந்து வரவில்லை. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பயணிகள் சென்று கேட்டனர். பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் பேருந்து ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனராம். இதனால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீஸார் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து, மூலக்காடு கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai