சுடச்சுட

    

    சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள தர்மநாதேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
    சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூர் ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த தர்மநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாதத்தில்  தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    நிகழாண்டு சித்திரைத்  தேரோட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவ மூர்த்தியை மலர்களால் அலங்கரித்து வைத்தனர்.
    இதனைத் தொடர்ந்து, பக்தர்களை தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai