சுடச்சுட

    

    மே 10 முதல் அரசுக் கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம்

    By DIN  |   Published on : 08th May 2017 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அரசுக் கலை - அறிவியல் கல்லூரியில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 10 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை அரசுக் கலை - அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக மேலாண்மை (பி.பி.ஏ.) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன.
    இங்கு காலை, மாலை என 2 பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதன்படி, 2017 - 18 ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 10-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
    பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.
    பிளஸ் 2 மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் அரசு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை தொடர்பான பரிந்துரைகள் ஏற்கப்படமாட்டாது.
    பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.
    ஜூன் 5-ஆம் தேதி முதல் முதல் 9-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai