சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே வங்கியில் ரூ. 25 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    தண்டராம்பட்டை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மாசிலாமணி (49). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வானாபுரத்தில் உள்ள வங்கியில் தனது நிலத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ. 25 லட்சம் கடன் வாங்கினாராம். இந்தக் கடன் தொகையை அவர் திருப்பிச் செலுத்தவில்லையாம்.
    இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் விசாரித்தபோது வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்றுவிட்டு, மாசிலாமணி தலைமறைவானது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ராமசர்மா, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மாசிலாமணியை தேடி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai