சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 10) கொண்டாடப்படுகிறது.
   இந்தத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2,900 போலீஸார் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கோயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   மேலும், கோயிலில் திடீரென ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
  ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா, மா.ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai