குடிநீர் கோரி சாலை மறியல்
By DIN | Published on : 09th May 2017 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செங்கம் அருகே நரிக்குறவர் இன மக்கள் குடிநீர் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாபாளையம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், கூடுதலாக குடிநீர் வழங்கக் கோரியும், செங்கம்-நீப்பத்துறை சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி ஷாஜித்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், மேல்செங்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கூடுதலாக டேங்கர் லாரி மூலம் தினசரி குடிநீர் வழங்குவதாகவும், மேலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.