சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சாத்தனூர், செங்கத்தில் 36.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வந்தது. முதலில் விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைக்காமல் போனது. நாளுக்கு நாள் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீர் கோரி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
   இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
  இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக செங்கம், சாத்தனூர் அணை பகுதியில் 36.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில் 2.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்தனர்.
  அதேநேரம், செய்யாறு, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்யாததால் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai