செங்கம், சாத்தனூரில் 36.40 மி.மீ., மழை பதிவு
By DIN | Published on : 09th May 2017 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிமை காலை வரை அதிகபட்சமாக சாத்தனூர், செங்கத்தில் 36.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வந்தது. முதலில் விவசாயம் செய்ய போதிய தண்ணீர் கிடைக்காமல் போனது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக செங்கம், சாத்தனூர் அணை பகுதியில் 36.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில் 2.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம், செய்யாறு, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்யாததால் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.