சுடச்சுட

  

  சென்னையில் அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத சர்வீஸ் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாள்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
   சென்னையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு சுகாதார மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், செய்யாறு சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai