சுடச்சுட

    

    சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
    உலகப் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 10) நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு சுமார்
    15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    எனவே, நகரில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் கிரிவலம் வரும் வகையிலும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
    அதன்படி, கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகள், நகரின் முக்கிய தெருக்களில் திங்கள்கிழமை  காவல்துறை உதவியுடன், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
    இதில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் (மே 9) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai