சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் நாளை சித்ரா பௌர்ணமி திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்

    By DIN  |   Published on : 09th May 2017 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shrithiruvannamalai

    மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலின் 9 கோபுரங்கள்.

     

    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 10) கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
     திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சித்ரா பௌர்ணமி திருவிழா பிரசித்தி பெற்று விளங்குகிறது.
     சித்ரா பௌர்ணமி நாளில் 2,668 அடி உயர மலையில் வாசம் செய்யும் சித்தர்கள் கிரிவலம் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு சித்ரா பௌர்ணமிக்கும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    கிரிவலம் வர உகந்த நேரம்: இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 10) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை பின் இரவு 1.50 மணி முதல் புதன்கிழமை (மே 10) பின் இரவு 3.31 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம். மே 10-ம் தேதி முழுமையான சித்ரா பௌர்ணமி தினம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு: சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, புதன்கிழமை (மே 10) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இரவு 11 மணி வரை மூலவர் சன்னதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். பொது தரிசனத்துடன், கட்டண தரிசன வரிசையும் அமைக்கப்படுகிறது.
    அமர்வு தரிசனம் ரத்து: புதன்கிழமை சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
     எம்எல்ஏ, எம்.பி., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.
    2,146 சிறப்புப் பேருந்துகள்: கிரிவல பக்தர்களின் நலன் கருதி தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,146 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரைச் சுற்றி 11 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    கார் நிறுத்துமிடம்
    நகரைச் சுற்றிலும் 35 இடங்களில் பக்தர்கள் வரும் கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் குடிநீர், கழிப்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் 9, 10, 11-ம் தேதிகளில் நடைபாதை கடைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    37 இடங்களில் அன்னதானம்: பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என மொத்தம் 37 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆவின் சார்பில் 16 இடங்களில் பால், மோர் விற்க கடைகள் அமைக்கப்படுகிறது. 18 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 85 இடங்களில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
    2,900 போலீஸார் பாதுகாப்பு: பாதுகாப்புப் பணியில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2,900 போலீஸார் ஈடுபடுகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai