சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 745 மனுக்கள் வரப்பெற்றன.
   கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மு.வடநேரே, பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 745 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
  இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
  நலத் திட்ட உதவிகள்
  கூட்டத்தில், முதுகுத் தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 500 மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.
   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஜோதி, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai