சுடச்சுட

  

  வறட்சி நிவாரணப் பணிக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 09th May 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் வறட்சி நிவாரணத்துக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்றார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.
  கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திங்கள்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
  தமிழகத்தில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் கைத்தறித் துறை அமைச்சரின் ஆலோசனை பெற்று மீண்டும் திறக்கப்படும். தமிழக கூட்டுறவுத் துறையில் பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 6 ஆண்டில் 58 லட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு, ரூ. 27 ஆயிரத்து 442 கோடியே 22 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 308 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 24 கிளைகளுடன் கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 88 கூட்டுறவு வங்கிகள் இருக்கின்றன. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.
  கிழக்கு கடற்கரை சாலைப் பணிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது எனவும், தமிழக அரசு இதுதொடர்பாக எந்த பதிலும் சொல்லைவில்லை, எனவே அந்த பணி முடங்கியிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக சொல்கிறீர்கள். மத்திய அரசு நாங்கள் கேட்ட தொகையை வழங்கவில்லை. வறட்சி நிவாரண நிதியாக ரூ. 39 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் கொடுத்தது மிகக்குறைவு என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai