சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 9) நடைபெறுகிறது.
   திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.
  இங்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  அதன்படி, செவ்வாய்க்கிழமை பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
   இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
   எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த இலவசப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
  மேலும் விவரங்களுக்கு இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிச் சாலை, வடஆண்டாப்பட்டு, திருவண்ணாமலை என்ற முகவரியில் அணுகலாம்.
  மேலும், 04175-206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai