சுடச்சுட

  

  அருணாசலேஸ்வரர் கோயிலில் மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு

  By DIN  |   Published on : 10th May 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வைக் காண பக்தர்கள் திரண்டனர்.
   அக்னி ஸ்தலமான இந்தக் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
  தினமும் இரவு வேளைகளில் கோயில் மூன்றாம் பிரகாரத்தை உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
   நிறைவு நாள்: விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அய்யங்
  குளத்தில் தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு கோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
  மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு: இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மதனை தகனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அருணாசலேஸ்வரர் எய்த அம்பில் சிக்கிய மன்மதன் கண்ணிமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலானார்.
  இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
   எரிந்த மன்மதனின் சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக் கொண்டனர். இத்துடன், இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai