Enable Javscript for better performance
ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
     ஆரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மார்க்கெட் செல்லும் சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ளதால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நகராட்சி சார்பில் அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கினர்.  ஆனால், கடை உரிமையாளர்கள் முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையர் கமலக்குமாரி, பொறியாளர் ரவி, நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  அப்போது, சில கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai