சுடச்சுட

  

  செங்கம் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, கிராம மக்கள் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் ஒரு கி.மீ. தொலைவு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
  இதற்கிடையே, கூடுதலாக சென்னசமுத்திரம் கிராமத்துக்கு குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்யக் கோரி, செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு வந்த அரசு நகரப் பேருந்தை றைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்த செங்கம் காவல் ஆய்வாளர் பூபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  அப்போது, குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai