சுடச்சுட

    

    செங்கம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
    செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் பழநி மனைவி தட்டம்மாள் (33) சாராய வியாபாரி. இவர் ஏற்கெனவே சாராய வழக்கில் பலமுறை கைதாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சாராய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.  இந்த நிலையில், தட்டம்மாள் மீண்டும் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த செங்கம் போலீஸார் தட்டம்மாளை கைது செய்தனர்.
    இதையடுத்து, தட்டம்மாளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. பொன்னி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார்.  அதன் பேரில் தட்டம்மாள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai