சுடச்சுட

  

  வேட்டவலம் சிங்காரக்குள மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
  செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வேப்பிலை, சக்தி கரக வீதியுலா நடைபெற்றது.
  தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.
   விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்க்கும் திருவிழா மே 23-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு  பூகரகம் சுமந்து, கையில் தீச்சட்டி ஏந்தியும், அலகுதேர் இழுத்தும் பக்தர்கள் மாட வீதிகளில் வலம் வருவர். மேலும், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
  மேலும், கேரள மேளம், பம்பை உடுக்கை, மேள-தாளங்கள் முழங்க கரக வீதியுலா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.   ஏற்பாடுகளை அறங்காவலர் செந்தில்குமார், ராமானுஜம், பச்சையப்பன் மற்றும் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து  வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai