சுடச்சுட

  

  போளூரில் போலீஸாரின் தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  போளூரில் பொதுமக்களிடம் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போலீஸார் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்றனர்.
  மேலும், விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.  ஊர்வலத்தை டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தொடங்கி வைத்தார்.
   இந்த ஊர்வலம் வேலூர்-திருவண்ணாமலை சாலை, ஜமுனாரமத்தூர் சாலை, பழைய பேருந்து நிலையம், அண்ணாசாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
  வந்தவாசி : வந்தவாசி இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நலச் சங்கம் சார்பில், தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் எஸ்.தேவராஜ் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ஜி.தணிகைவேல் வரவேற்றார். வந்தவாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பொற்செழியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
  ஊர்வலத்தில் வழக்குரைஞர் பிரகாஷ், சங்க பொருளர் எ.அப்துல்சர்தார், துணைச் செயலர் நேமிதாஸ், துணை பொருளர் முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai