சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திருக்குறள் வினாடி வினா மற்றும் ஒப்புவித்தல் போட்டி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். திருக்குறளின் மேன்மை என்ற தலைப்பில் தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி இயக்குநர் எஸ்.அப்பாண்டைராஜன் சிறப்புரை ஆற்றினார்.
    இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் திருவள்ளுவர் வேடமணிந்து பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மா.கதிரொளி, புலவர் ந.பானு மற்றும் ந.சுரேஷ்பாபு, க.முருகன், க.பூபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai