சுடச்சுட

  

  திருவண்ணாமலைக்கு இன்று 2,146 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

  By DIN  |   Published on : 10th May 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 10) கொண்டாடப்படுகிறது.
   விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,146 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
   போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க நகரைச் சுற்றி 12 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் விவரம்: திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, செஞ்சி, திண்டிவனம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, செங்கம் சாலை அத்தியந்தல் கிராமத்தில் இருந்து செங்கம், திருப்பத்தூர், சேலம், ஓசூர், பெங்களூரு செல்லும் பேருந்துகளும், செங்கம் சாலையில் உள்ள சுபிக்சா கார்டன் பகுதியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளும், வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து வேலூர், ஆரணி, செய்யாறு, ஆற்காடு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
   இதேபோல, அவலூர்பேட்டை சாலை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி எதிரில் இருந்து சேத்பட், வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளும், காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் எதிரில் இருந்து காஞ்சி, காரப்பட்டு, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம் செல்லும் பேருந்துகளும், வேட்டவலம் செல்லும் புறவழிச் சாலை அருகில் இருந்து விழுப்புரம், வேட்டவலம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
   மேலும், திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி எதிரில் இருந்து திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், நெய்வேலி செல்லும் பேருந்துகளும், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் இருந்து கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் பேருந்துகளும், திருக்கோவிலூர் சாலை அன்பு நகரில் இருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
  இதேபோல, மணலூர்பேட்டை சாலை, வட்டச் சாலை பகுதியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகளும், தண்டராம்பட்டு சாலை நல்லவன்பாளையம் பகுதியில் இருந்து தானிப்பாடி, கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இதுதவிர, அன்பு நகரில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்துக்கு இணைப்புப் பேருந்துகளும், நல்லவன்பாளையம் முதல் பழைய அரசு மருத்துவமனை வழியாக காமராஜர் சிலை வரை இணைப்புப் பேருந்துகள் ரூ.5 கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
  இந்த பேருந்து வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai