சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி அமர்நாத் பனிலிங்கத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை, செட்டித் தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் தனியார் அமைப்பு சார்பில் செயற்கை குகை அமைக்கப்பட்டு அதில் மாதிரி அமர்நாத் பனிலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 9 அடி உயரம் 18 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பனிலிங்கத்தின் தரிசனம் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது.
    நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் இரா.அருண்குமார் தலைமை வகித்தார். கிரியா பாபாஜி ஆஸ்ரம நிர்வாகி நந்தினி குத்து விளக்கேற்றினார்.  வழக்குரைஞர் சக்தி முருகன், ராஜ்மோகன் ம.சதீஷ்குமார் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    அமர்நாத்தில் உள்ளது போலவே 9 வளைவுகள் நீர்வீழ்ச்சிகள் ஆறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பனிலிங்கத்துக்கு தினமும் சிறப்புப் பூஜை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இந்த தரிசனத்தை காணலாம். இந்த பனிலிங்க தரிசனம் வரும் 29-ம் தேதி நிறைவு பெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai