சுடச்சுட

    

    சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.
     புதன்கிழமை அதிகாலை 1.50 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 3.31 மணி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம். மே 10-ம் தேதி முழுமையான சித்ரா பௌர்ணமி தினம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.
    இருப்பினும், செவ்வாய்க்கிழமை மாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். மாலை 6 மணியளவில் கிரிவலப் பாதையில் திடீர் மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.  இரவு 10 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai