Enable Javscript for better performance
திருவண்ணாமலையில்2-வது நாளாக இடியுடன் மழை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடியுடன் மழை பெய்தது.
    சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோயில் திருவண்ணாமலையில் உள்ளது. எனவே, இங்கு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் சில மாதங்களாக அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    2-வது நாளாக மழை: இந்த நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை மாலை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியர் அலுவலகம் உள்பட அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக் காற்று வீசியது. பின்னர், இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து, 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இந்தத் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai