Enable Javscript for better performance
தீ விபத்து நிவாரணம் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கம் அருகேயுள்ள கீழ்வன்னீயனூர்  கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திங்கள்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    கலசப்பாக்கம் அடுத்த கீழ்வன்னீயனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன் மனைவி வள்ளியம்மாள். இவரது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மின் கசிவில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
    வருவாய்த் துறை சார்பில் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாளுக்கு ரூ.5ஆயிரம், அரிசி, சேலை ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வி.பன்னீர்செல்வம் எம்எம்எல்ஏ பங்கேற்று நிவாரண உதவியை வழங்கினார்.
    சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் துரை மற்றும் வருவாய்த் துறையினர், அதிமுக (அம்மா அணி) நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai