Enable Javscript for better performance
பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியில் இரு சக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணம் திருடப்பட்டது.
    வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆசைத்தம்பி (60). இவர் கடந்த சனிக்கிழமை வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள வங்கிக்குச் சென்று ரூ.ஒரு லட்சம் பணம் எடுத்துள்ளார். அந்தப் பணத்தை தனது இருசக்கர வாகன பெட்டியில் வைத்துக் கொண்டு தேரடிக்கு சென்றுள்ளார்.  அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பிவந்து பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது பெட்டியில் வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆசைத்தம்பி அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai