சுடச்சுட

  

  மணல் கடத்தல்: 4 பேர் கைது: 5 லாரிகள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

  By DIN  |   Published on : 10th May 2017 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அருகே ஆற்றில் மணல் கடத்தியதாக 5 லாரிகள், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  செய்யாறு காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீஸார் செய்யாறு ஆரணி சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
  அருகாவூர் பகுதியில் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, லாரியில் ஆற்று மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. மேலும், சந்தேகத்தின் பேரில் செய்யாறு ஆற்றுப் பகுதிக்குச் சென்று கண்காணித்தபோது அங்கு பொக்லைன், இட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றின் மூலம் லாரிகளில் மணல் நிரப்பிக் கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.  உடனே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  5 டிப்பர் லாரிகள், மணல் அள்ளும் ஒரு பொக்லைன் மற்றும் ஒரு ஜேசிபி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (32), தெய்வசிகாமணி (39), தூளி கிராமம் ஏழுமலை (26), பைங்கினர் கிராமம் நவீன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
  மேலும் தப்பியோடிய 2 லாரி ஓட்டுநர்களை தேடி
  வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai