மண்பாண்டத் தொழிலாளர்கள் பேரணி
By DIN | Published on : 10th May 2017 06:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செய்யாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்பாண்டத் தொழிலாளர்கள் பேரணி சென்று சார்-ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில், செய்யாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
செய்யாறு சந்தைத் திடலில் தொடங்கிய பேரணி காந்தி சாலை, பேருந்து நிலையம், ஆற்காடு சாலை வழியாகச் சென்று சார்-ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
பேரணிக்கு மாவட்டத் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். 50 பெண்கள் உள்பட 150 கலந்து கொண்டனர்.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்புத் தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நிதி வழங்க வேண்டும், இலவச களிமண் எடுத்துக் கொள்ள ஒரே மாதிரியான அரசாணை வழங்க வேண்டும், மண்பாண்ட கூட்டுறவு சங்கங்களை சீரமைக்க வேண்டும், மண்பாண்ட தொழிற்கூடங்கள் கட்ட வங்கிகளில் கடனுதவி மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சார்-ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் சங்கத்தினர் வழங்கினர்.