சுடச்சுட

    

    வருவாய்த் துறையில் பணியிட மாறுதல்: கலந்தாய்வு முறையைப் பின்பற்றக் கோரிக்கை

    By DIN  |   Published on : 10th May 2017 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணியிட மாறுதல்கள் அனைத்துக்கும் கலந்தாய்வு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
     தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் போளூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     போளூர் வட்டக் கிளை சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சண்முகம்,  மாவட்ட பொருளாளர் ஆர்.மஞ்சுளா, மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் ஒய்.அப்துல் ரகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  டி.கிருஷ்ணமூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஏ.கவுரி ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.
    கூட்டத்தில், அரசாணை எண் 133-ன் படி தாற்காலிக துணை வட்டாட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.
    2012 முதல் 2016 வரை வெளியிடப்பட்ட வருவாய் உதவியாளர் முதுநிலைப் பட்டியலில் உள்ள குறைகளைச் சரிசெய்ய வேண்டும்.  இதுதொடர்பாக, பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் சரிசெய்யாமல் அமைதி காப்பதை கண்டிப்பது.
     2013-14-ல் பதவி உயர்வு பெற்றவர்கள்  எந்த நாளில் வருவாய் ஆய்வாளர் மற்றும் பராமரிப்புப் பயிற்சித் தேர்வு முடித்ததாக உத்தரவிடப்பட்டதோ, அதே நாளில் 2011-12, 13 அணியில் உள்ள நேரடி நியமன உதவியாளர்களுக்கும் பயிற்சி முடித்ததாக உத்தரவிட உரிய விதி தளர்வு செய்ய வேண்டும்.
    வருவாய் ஆய்வாளர் பயிற்சியை இதுவரை பெறாத நேரடி நியமன உதவியாளர்கள் அனைவருக்கும் இன்டர் சீனியாரிட்டியை பின்பற்றாமல் வருவாய் ஆய்வாளர் பயிற்சி வழங்க வேண்டும். பணியிட மாறுதலின்போது உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை கலந்தாய்வு முறையை பின்பற்ற வேண்டும்.
    நேரடி நியமன உதவியாளர்களுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு 5 ஆண்டுகள் என்பதை மாற்றி 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai