Enable Javscript for better performance
விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
     திருவண்ணாமலையை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் (62). இவரது மனைவி பொன்னிம்மாள். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கண்ணாயிரம் தனக்குச் சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட, சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம்.
     ஆனால், வறட்சியால் கிணற்றில் தண்ணீர் வற்றி கரும்பு காய்ந்துவிட்டதாம். இதற்கிடையே, வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனை திருப்புக் கேட்டு வந்தனராம். கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கண்ணாயிரம் தவித்து வந்தார். ஆனால், கடன்தாரரின் தொல்லை அதிகமானதால் மனமுடைந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தாராம்.  உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai