சுடச்சுட

  

  செங்கத்தில் செங்கம் ஜூலியஸ் ஹாக்கி கிளப் நடத்திய 15-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி  போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
  செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மே 4ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருச்சி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹக்கி அணிகள் பங்கேற்று விளையாடின.
  அதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஏ.டி.ஏ.எம். அணி முதல் பரிசும், சேலம் அணி இரண்டாம் பரிசும், திருச்சி புனித வளனார் அணி மூன்றாம் பரிசும், செங்கம் ஜூலியஸ் அணி நான்காம் பரிசும் பெற்றனர்.
  சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
  போட்டிக்கான ஏற்பாடுகளை செங்கம் ஜூலியஸ் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai