சுடச்சுட

  

  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 42 இடங்களில் இலவச குளியல் அறைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
   அதன்படி, திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள தென்மாத்தூர், லட்சுமிபுரம், சு.ஆண்டாப்பட்டு, பவித்திரம் கூட்டுச் சாலை, பவித்திரம் புதூர் ஆகிய கிராமங்களில் மொத்தம் 10 இடங்களில் இலவச குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இதேபோல, திருவண்ணாமலை-கீழ்பென்னாத்தூர் சாலையில் உள்ள சோமாசிபாடி புதூர், சிறுநாத்தூர் கிராமங்களில் 2 இடங்களிலும், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள தானாமேடு, அஸ்வநாதசுனை, பெரியகோலப்பாடி, கண்ணாகுருகை ஆகிய கிராமங்களில் 5 இடங்களிலும் இலவச குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  மேலும், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள துர்கை நம்மியந்தல், தீபம் நகர், இனாம்காரியந்தல், புதுமல்லவாடி, நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை பகுதிகளில் 7 இடங்களிலும், கலசப்பாக்கம் அடுத்த அரவிந்தர், செழியன் கல்லூரிகளின் எதிரிலும், பாலத்துக்கு முன்பும் என 2 இடங்களிலும், திருவண்ணாமலை-மங்கலம் சாலையில் உள்ள சானானந்தல், மங்கலம்
  புதூர், ஆர்ப்பாக்கம், புலியங்குளம், வேடந்தவாடி கூட்டுச் சாலை ஆகிய கிராமங்களில் மொத்தம் 5 இடங்களிலும் இலவச குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
   மேலும், திருவண்ணாமலை-தானிப்பாடி சாலையில் உள்ள தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராதாபுரம்
  கிராம சேவை மையம், ராதாபுரம் மசூதி, தண்ணீர்ப் பந்தல், மேல்சிறுப்பாக்கம், மஞ்சம்பூண்டி ஹெப்ரான் பள்ளி, எம்.ஜி.எஸ். மில், கீழ்ராவந்தவாடி பாரத் வித்யா மந்திர் பள்ளி, கமலாம்பாள் மெட்ரிக் பள்ளி, தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் மொத்தம் 10 இடங்களிலும் என மொத்தம் 42 இடங்களில் இலவச குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai