சுடச்சுட

  

  செங்கத்தில் அரசு ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு வங்கிக் கிளை மேலாளர் பாலாஜி தலைமை வகித்தார். உந்துநர் அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செங்கண்மாமுருகு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் அப்துல் காதர், குப்பன் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர்.
  கூட்டத்தில் செங்கம் கிளையில் ஓய்வூதியர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு தனியார் ஒரு கவுன்டர் அமைக்க வேண்டும், வங்கியில் கழிவறை வசதி செய்து தரவேண்டும், ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை என்றால், உடனடியாகப் பணத்தை வைக்க வேண்டும், நகைக் கடன்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
  வங்கி ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai