சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில், "கிராமியக் கலைகளும் காந்தியமும்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில், மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை கிராமியக் கலைகளும் காந்தியமும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை டி.எம்.கர்மேல் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரவையின் நிறுவனர் தலைவர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். நல்லாசிரியர் மூர்த்தி, கவிஞர் லதா பிரபுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ந.சண்முகம் வரவேற்றார்.
    திருவண்ணாமலை அரசுக் கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பெ.சுப்பிரமணியம், கவிஞர் ஆ.தே.முருகையன், பேராசிரியர் நித்யா, வழக்குரைஞர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.
    பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
    முன்னதாக, நந்தினியின் பரதநாட்டியம் நடைபெற்றது. விழாவில், பேரவைத் துணைத் தலைவர் வாசுதேவன், பாவலர் சு.வேலாயுதம், திருக்குறள் ச.சுப்பிரமணியன், புதிய பார்வை அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்பிரமணி, தமிழறிஞர் சுப்பிரமணி, வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன், திருக்குறள் சமுதாயம் தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன், புலவர் மா.கோவிந்தசாமி, எழுத்தாளர் உமாதேவி பலராமன், வேங்கிக்கால் கிளை நூலகர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai