சுடச்சுட

  

  சித்ரா பெளர்ணமிக்காக திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் 18 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆயிரம் கால் மண்டபம், கோயில் கொடிமரம் எதிரில் என 2 இடங்களில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
  இந்த மருத்துவ முகாம்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடக்கி வைத்தார். மருத்துவர்கள் ஸ்ரீதர், கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் தொடர்ந்து முகாமில் பணியாற்றி, பக்தர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
  இதேபோல, திருவண்ணாமலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் சார்பிலும், நகராட்சி நிர்வாகம் சார்பிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், 108
  ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.
  பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கல்: சித்ரா பெளர்ணமியையொட்டி, கிரிவலம் வந்த பல லட்சம் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டன. இங்கு அன்னதானம், குடிநீர், தர்பூசணி, மோர், கூழ் ஆகியவை வழங்கப்பட்டன.
  திருவண்ணாமலை எம்.எல்.ஏ. எ.வ.வேலு சார்பில், செங்கம் சாலையில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில், எமலிங்கம் கோயில் எதிரில், வள்ளலார் கோயில், சீனிவாசா பள்ளி எதிரில், காஞ்சி சாலை அபய மண்டபம் எதிரில், அண்ணா நுழைவு வாயில் ஆகிய 6 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. திமுக நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு தண்ணீர், மோர் ஆகியவற்றை வழங்கினர்.
  இதேபோல, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், ஆணாய்ப்பிறந்தான் ஊராட்சியில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் அன்னதானக் குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai