Enable Javscript for better performance
சித்ரா பௌர்ணமி திருவிழா: நுங்கு, குளிர்பானம் விற்பனை விறுவிறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    சித்ரா பௌர்ணமி திருவிழா: நுங்கு, குளிர்பானம் விற்பனை விறுவிறுப்பு

    By DIN  |   Published on : 11th May 2017 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்ரா பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நுங்கு, குளிர்பானங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் மற்ற மாவட்டங்களைவிட அதிக அளவு அனல் காற்று வீசி வருகிறது.
    இந்த நிலையில், சித்ரா பெளர்ணமியையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
    காலை 10 மணியைக் கடந்ததும் சாலைகளில் அனல் காற்று வீசியது.
    தார் சாலைகளில் வெப்பம் அதிகமாக இருந்ததால், கிரிவலம் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இதனால், ஆங்காங்கே தண்ணீர், மோர் வழங்கப்பட்டன.
    நுங்கு, தர்பூசணி விற்பனை விறுவிறுப்பு: கோயிலுக்கு வெளியே கிரிவலப் பாதையில் ஏராளமான தாற்காலிக குளிர்பானக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் குளிர்பானங்கள், குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல, கிரிவலப் பாதையின் பல இடங்களில் பனை நுங்கு விற்பனையும் நடைபெற்றது.
    சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பக்தர்கள் பலர் பனை நுங்கை ஆர்வமுடன் வாங்கிச் சாப்பிடபடி கிரிவலம் வந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai