சுடச்சுட

    

    சிறப்பு மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

    By DIN  |   Published on : 11th May 2017 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பம்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமுக்கு வட்டாட்சியர் ஆர்.ரவி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.குமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பி.மாலதி வரவேற்றார்.
    சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வி.ஜோதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 155 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    இவற்றில், 109 மனுக்கள் ஏற்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமில் வேளாண் உதவி இயக்குநர் சி.ஹரிக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.கோபால், கலிமுல்லா, ஏ.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai