சுடச்சுட

  

  செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

  By DIN  |   Published on : 11th May 2017 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
  செய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் காலை, மாலை என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியியல், கணிப்பொறி அறிவியல், கணினிப் பயன்பாட்டியியல் ஆகிய பாடப் பிரிவுகள் தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
  இளங்கலை வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தில் ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  பட்டியல் இன வகுப்பு மாணவர்கள் (நஇ-நப)  அசல் சாதிச் சான்றிதழை அலுவலகத்தில் வழங்கி கட்டணமில்லாமல் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 26 ஆகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆம் தேதி வெளியிடப்படும்.
  கலந்தாய்வு நடைபெறும் நாள்கள் விபரம்: அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 5 முதல் 8 வரையும், தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 9-ஆம் தேதியும், வணிகவியல், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 10-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரியின் முதல்வர் ரா.கீதாராணி தெரிவித்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai