சுடச்சுட

    

    நூறு சதவிகித மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
     இதுகுறித்து, அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     அனக்காவூர் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு (தென்னை, கரும்பு பயிர்), தெளிப்பு நீர்ப்பாசன அமைப்பு (பயறு வகை, எண்ணெய் வித்து பயிர்கள்) ஆகிய நுண்ணீர் பாசன அமைப்பு பிரதான் மந்திரி  கிருஷி சின்ஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
     சொட்டு நீர்ப்பாசன அமைப்பு, தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு ஆகியவற்றை மானியத்துடன் பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படங்கள்-2, குடும்ப அட்டை நகல், சிட்டா நகல், அடங்கல் நகல், நில வரைபடம், கிணறு ஆவணம் மின்மோட்டார், நீர் பரிசோதனை அறிக்கை,  மண் பரிசோதனை அறிக்கை, சிறு குறு விவசாயி ஆவணம், செல்லிடப்பேசி எண், ஆதார் அட்டை நகல் ஆகிய சான்றுகளுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு
    பயன் அடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai