சுடச்சுட

    

    செங்கம் அருகே மண்மலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    செங்கம் அருகே உள்ள மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கோலாந்தாங்கல் ஆகிய பகுதிகளுக்கான மனுநீதி நாள் முகாம் மண்மலை கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரேணுகா, வருவாய் ஆய்வாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில அளவை அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் சுப்பிரமணி, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டைகள் உள்பட 120 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
    முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பத்மா, சத்யா, சங்கமித்ரா, உள்பட பலவேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai