Enable Javscript for better performance
நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    சேத்துப்பட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உதயகுமார், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி வெங்கிடேசன் வரவேற்றார்.
    சேத்துப்பட்டு நகரத் தலைவராக தசரதன், செயலராக ராபர்ட், பொருளாளராக சண்முகம், துணைத் தலைவராக சின்னையன், துணைச் செயலராக தங்கமணி, மாவட்ட பிரதிநிதிகளாக கிருஷ்ணன், வெங்கடேசன், வரதராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சேத்துப்பட்டில் உள்ள அனைத்து தையற்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai