பெரியகரம் காளியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published on : 11th May 2017 06:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போளூரை அடுத்த பெரியகரம் காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூழ்வார்க்கும் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு காளியம்மனுக்கு கூழ் வார்த்தல் விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து, பூங்கரம் ஊர்வலமும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை கூழ் வார்க்கும் விழாவும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெற்றன.
இதனையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ அம்மன் வைக்கப்பட்டு, தேரை ஊர்மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். கிராமத்தின் வீதிகள் வழியாக பவனி வந்த தேர், மீண்டும் கோயில் நிலையை அடைந்தது.
இதில், போளூர், பெரியகரம், பூங்கொல்லைமேடு, அத்திமூர், ஆர்.குண்ணத்தூர், ஏந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.