சுடச்சுட

  

  செங்கம் அருகே உள்ள பேயாலம்பட்டு கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலில் கடந்த மே 2-ஆம் தேதி தொடங்கி தினமும் இரவில் கட்டை கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது.
  இதில், முக்கிய நாடகங்களான பகாசூரன் வதை, வில் வளைப்பு, ராஜசுய யாகம், திரௌபதி துகில், அர்சுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கர்ணன் மோட்சம் ஆகிய நாடகங்கள் நடைபெற்றன. அதன் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
  இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில் தீமிதி விழா நடைபெற்று. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai