சுடச்சுட

  

  திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி தாற்காலிகப் பேருந்து நிலையத்தில், பின்னோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் வேறொரு அரசுப் பேருந்தின் நடத்துநர் உயிரிழந்தார்.
  திருவண்ணாமலையில் சித்ரா பெளர்ணமி விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகரைச் சுற்றிலும் 12 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.
  அதன்படி, திருவண்ணாமலை-செங்கம் சாலை, அத்தியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கம், திருப்பத்தூர், சேலம், ஓசூர், பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில்,சிறப்புப் பேருந்து ஒன்றில் வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்த மோகனம் (53) நடத்துநராகப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  இந்த நிலையில், அரசுப் பேருந்தின் முன் பகுதியில் நின்றிருந்தபோது, முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு அரசுப் பேருந்து திடீரென பின்னோக்கி நகர்ந்துள்ளது.
  இந்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் 2 அரசுப் பேருந்துகளுக்கும் நடுவே மோகனம் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழதார்.
  தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai